சூரியனை சுற்றி ஒளிவட்டம் - வியந்து பார்த்த தாராபுரம்வாசிகள்

சூரியனை சுற்றி ஒளிவட்டம் - வியந்து பார்த்த தாராபுரம்வாசிகள்
X

தாராபுரம் பகுதியில், இன்று சூரியனைச் சுற்றி தென்பட்ட அதிசய ஒளிவட்டம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதிகளில், சூரியனை சுற்றி ஒளிவட்டம் தென்பட்டத்தை, பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில், இன்று காலை வானம், மேகமூட்டத்துடன் இருந்தது. நண்பகலுக்கு பின்னர் சூரியன் தலைகாட்டத் தொடங்கிய நிலையில், சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றியது. வழக்கமாக இல்லாமல் இன்று தென்பட்ட இந்த சூரிய ஒளி வட்டத்தை, பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர். ஒருசிலர், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இது குறித்து, வானிலை ஆய்வு அதிகாரிகளிடம் விசாரித்த போது கூறியதாவது: கோடை காலத்தில் வளிமண்டலத்தின் மேற்பரப்பில் மழை மேகங்கள் மிக உயரத்தில் செல்லும். அப்போது பட்டக வடிவில், பனிக்கட்டி துகள்களாக மாறும். அந்த நேரத்தில், சூரிய ஒளி, துகள் மீது பட்டு பிரதிபலித்து, ஒளி விலகல் அடையும்.

அதனை அறிவியலில், குறைந்தபட்ச ஒளி விலகல் கோணம் என்று அழைப்பார்கள். 22 டிகிரி அளவில் ஒளி விலகல் அடையும். அப்போது சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் ஏற்படும். இவ்வாறான நேரங்களில் வெப்பச்சலனம் ஏற்பட்டால் பனிக் கட்டிகள் மழையாக பெய்யும் என்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!