திருப்பூர்: முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருப்பூர்: முன்னாள் ராணுவ வீரர் மீது  குண்டர் சட்டம் பாய்ந்தது
X
திருப்பூர் மாவட்டம் மூலனூரில் முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது.


திருப்பூர் மாவட்டம் மூலனுார் கிளாங்குண்டல் கிராமம் சுள்ளப்பெருக்கி பாளையத்தில் வசித்தவர் வேலுசாமி மற்றும் ரவி. அதே பகுதியில் வசிப்பவர் முன்னாள் ராணுவ வீரர் முத்துசாமி. 77 வயதான வயதான இவர், தனது கள்ளக்காதல் விவகாரத்துக்கு இடையூறாக இருந்ததாக வேலுசாமி, ரவி ஆகியோரை கொலை செய்ததாக, கைது செய்யப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்ட அவரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வினீத் உத்தரவிட்டார். அதன்படி முத்துசாமி மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முத்துசாமியிடம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!