விரைவில் மாவட்ட அந்தஸ்து பெறும் தாராபுரம் அரசு மருத்துவமனை
கோப்பு படம்
திருப்பூரில் உள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லுாரியாக அறிவிக்கப்பட்டு, கட்டுமானப்பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. எனவே, மாவட்டத்தில் ஏதேனும் ஒரு இடத்தில், மாவட்ட மருத்துவமனை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியிலேயே இதுதொடர்பான திட்டமிடல் இருந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் ஒன்பது தாலுகா அரசு மருத்துவமனைகள் உள்ள நிலையில், அவினாசி அரசு மருத்துவமனை அல்லது தாராபுரம் அரசு மருத்துவனையில் ஏதேனும் ஒன்றை, மாவட்ட அந்தஸ்துக்கு தரம் உயர்த்தும் பேச்சு இருந்தது. இதில், தாராபுரம் மருத்துவமனையை, தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த, துறை சார்ந்த உயரதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர் என கூறப்படுகிறது.
இது குறித்து, மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநிலம் முழுவதும், தாலுகா அரசு மருத்துவமனை தரம் உயர்த்துவதற்கான பட்டியலில், தாராபுரம் இடம் பெற்றுள்ளது. தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தும் போது, கூடுதலாக மருத்துவர்கள், மயக்கவியல், அறுவை சிகிச்சை நிபுணர்கள் நியமிக்கப்படுவர். கூடுதலாக கட்டடம் கட்டப்பட்டு, 500 பேர் தங்கி சிகிச்சை பெறுவதற்கு தேவையான வசதி ஏற்படுத்தப்படும். ஓரிரு நாளில், இதற்கான அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu