தாராபுரத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தாராபுரத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தாராபுரம் கிளை சங்கத்தை சேர்ந்தவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின், தாராபுரம் வட்ட கிளை சார்பில், நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ராஜூ தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, கோரிக்கை விளக்க உரையாற்றினார். வெள்ளி, சனி நாட்களில், தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தாயம்பாளையம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜோசப் சகாயராஜ், மூலனூர் கிராம சுகாதார செவிலியர் சவுடேஸ்வரி, கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி தமயந்தி, சுகாதார ஆய்வாளர் பிரபு, வட்டக்கிளை நிர்வாகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வட்டக்கிளை நிர்வாகி நவீன் நன்றி கூறினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!