கன்னிவாடி சந்தையில் ரூ. 10 கோடிக்கு ஆடுகள் விற்பனை

கன்னிவாடி சந்தையில் ரூ. 10 கோடிக்கு ஆடுகள் விற்பனை
X

Tirupur News- கன்னிவாடி சந்தையில் ரூ. 10 கோடிக்கு ஆடுகள் விற்பனை (கோப்பு படம்)

Tirupur News- தீபாவளியை முன்னிட்டு கன்னிவாடி சந்தையில் ரூ. 10 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

Tirupur News,Tirupur News Today- தமிழகத்தில் நடக்கும் ஆடுகள் விற்பனை சந்தையில் திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள கன்னிவாடி சந்தையும் ஒன்றாகும். கன்னிவாடி சந்தை வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடந்து வருகிறது.அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று கன்னிவாடி சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகளவில் நடந்தது. அதே நேரம் ஆடுகள் வரத்து அதிகரிப்பால் விலையில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது.

இது குறித்து ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரிகள் கூறியதாவது,

இந்த வார சந்தைக்கு மூலனூர், அரவக்குறிச்சி, தாராபுரம், பகவான் கோவில், உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆடுகளை வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஆடுகளை வாங்குவதற்காக மேச்சேரி, கேரளா, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, ஆந்திரா, சென்னை, உடுமலை, பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். இவர்கள் இங்கு ஆடுகளை வாங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காகவும், இறைச்சிக்காகவும் கொண்டு செல்கின்றனர்.

ஆடுகளின் வரத்து அதிகரித்திருந்ததாலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதாலும் புத்தாடைகள் போன்ற பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதால் வியாபாரிகள், விவசாயிகள் அதிக அளவில் ஆடுகளை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்

இதனால் கடந்த வாரங்களில் இறைச்சிக்காக வாங்கப்படும் 10 கிலோ எடையுள்ள ஒரு ஆடு ரூ.6 ஆயிரத்து 200க்கு விலை போனது. ஆனால் இந்த வாரம் ரூ.5 ஆயிரத்து 500க்கு விலைபோனது. ரூ.12 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்த குட்டியுடன் கூடிய பெரிய ஆடுகள் இந்த வாரம் ரூ.9 ஆயிரத்து 500ஆக குறைந்துவிட்டது. இதனால் விலை வீழ்ச்சி ஏற்பட்டது. மேலும் நேற்று நடந்த சந்தையில் சுமார் ரூ.10 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
the future with ai