ருத்ராவதி பேரூராட்சியில் அ.தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு?

ருத்ராவதி பேரூராட்சியில் அ.தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு?
X

சுமதி

தாராபுரம் அருகே ருத்ராவதி பேரூராட்சி, 14வது வார்டில், அ.தி.மு.க., வேட்பாளர் மட்டும் மனுத்தாக்கல் செய்துள்ளதால், போட்டியின்றி தேர்வாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே ருத்ராவதி பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. ஆண்கள், 3,212 ஆண்கள்; 3,348 பெண்கள் என, 6,560 வாக்காளர் உள்ளனர். மொத்தம், 15 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேரூராட்சியின் 14வது வார்டு, பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., சார்பில், சங்கம்பாளையத்தை சேர்ந்த, சுமதி, 43 என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது உறவினர் கார்த்திகா, மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மற்ற யாரும் மனுத்தாக்கல் செய்யாத நிலையில், நேற்றைய பரிசீலனையின் போது, இரண்டு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று வேட்பாளர் வாபஸ் பெறும் நிலையில், வேட்பாளர் சுமதி, போட்டியின்றி வெற்றி பெறும் சூழல் உருவாகியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!