தாயில்லா குழந்தைகளின் தந்தை கொரோனாவுக்கு பலி: ஆதரவற்ற சிறுவர்களுக்கு திருப்பூர் கலெக்டர் உதவுவாரா?

தாயில்லா குழந்தைகளின் தந்தை கொரோனாவுக்கு பலி: ஆதரவற்ற சிறுவர்களுக்கு திருப்பூர் கலெக்டர் உதவுவாரா?
X
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே தாய், தந்தை இறந்த சிறுவர்களுக்கு, நிவாரணம் வழங்கி அரசு உதவ வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தாராபுரம் கொண்டரசம்பாளையம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார்,45. கார் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

செந்தில்குமாரின் மனைவி கார்த்திகா, கடந்த 9 ஆண்டுக்கு முன் இறந்து விட்டனர். இவர்களுக்கு தரணீஷ்,13, ரித்விக்,10, என்ற இரு குழந்தைகள் உள்ளனர். தரணீஷ், 9 ம் வகுப்பும், ரித்விக்,5 ம் வகுப்பு படித்து வருகின்றனர். ஏற்கனவே தாய் இறந்த நிலையில், தற்போது தந்தையும் இறந்து விட்டதால், குழந்தைகள் ஆதரவற்ற நிலையில் உள்ளனர்.

கார்த்திகாவின் தாய் தேவி, இரண்டு குழந்தைகளையும் கவனிக்கிறார். அவரும் வயதானவர் என்பதால், குழந்தைகளை பராமரிக்க முடியாத நிலையில் உள்ளார். இந்த குழந்தைகளுக்கு கொரோனா அரசின் நிவாரணத்தொகை கிடைக்க, திருப்பூர் மாவட்ட கலெக்டரோ, அல்லது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாயும், தந்தையும் இல்லாத நிலையில் குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதால், தொண்டு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் இக்குழந்தைகளுக்கு உதவவும், படிப்தை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை உரிய நடவடிக்கை எடுத்து, குழந்தைகளுக்கு உதவ முன்வர வேண்டும்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்