தாராபுரம் உழவர் சந்தை அருகில் விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்

தாராபுரம் உழவர் சந்தை அருகில் விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்
X

தாராபுரத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

தாராபுரம் உழவர் சந்தை அருகில் விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

தாராபுரம் உழவர் சந்தை அருகில் விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா நகரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினமும் விளைந்த காய்கறிகளை விவசாயிகள் இங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் உழவர்சந்தை அருகிலும், உழவர் சந்தையை சுற்றிலும் சாலையோரம் வியாபாரிகள் சிலர் கடைகள் அமைத்து காய்கறி வியாபாரம் செய்து வந்தனர். இதனால் உழவர்சந்தையில் விற்பனை பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். கடந்த ஆண்டு தாராபுரம் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து சில கடைகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இருப்பினும் உழவர் சந்தை அருகிலேயே உள்ளூர் காய்கறிகள் எனக்கூறி வெளியூரில் இருந்து இறக்குமதி செய்த காய்கறிகளை வியாபாரிகளும் இடைத்தரகர்களும் கடைகள் அமைத்து விற்பனை செய்து வருவதாகவும், இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை உழவர் சந்தைக்கு வந்த விவசாயிகள் அனைவரும் உழவர் சந்தையை சுற்றிலும் அமைந்துள்ள அனுமதி பெறாத சாலையோர காய்கறி விற்பனை கடைகளையும், வீடுகளின் முன்புறம் கடைகளை போல அமைத்து விற்பனை செய்யும் கடைகளையும் உடனே அகற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன் தலைமையில் தாராபுரம் பொள்ளாச்சி சாலை என். சி .பி. நகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகே சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்த தகவல் அறிந்ததும் தாராபுரம் டி.எஸ்.பி., தன்ராஜ், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறை நிர்வாகத்திடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் உழவர் சந்தை விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
அதிர்ச்சி சம்பவம்: வெள்ளித்திருப்பூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பொதுமக்கள் அச்சம்