தாராபுரம் ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்

தாராபுரம் ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
X

தமிழக விவசாயிகள் சங்கம், மற்றும் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் தாராபுரம் ஆர்டிஓ அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, தாராபுரம் ஆர்டிஓ அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட உழவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோ வாட் திட்டப்பணிகளில், ஒப்பந்தத்தை மீறி நடக்கும் அனைத்து பணிகளையும், உடனடியாக வழக்குகள் முடியும் வரை நிறுத்த வேண்டும், பவர்கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகத்தால் ஏற்கனவே விவசாயிகள் ஆட்சேபனைக்கிடையே அமைக்கப்பட்ட திட்டங்களுக்கு 100 சதவீத கருணைத் தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இனாம் நிலங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயிர்கள் மற்றும் மரத்துக்கான இழப்பீடு அனுபவத்தில் உள்ள உழவர்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து உயர்மின் கோபுரங்கள் திட்டங்களுக்கும் மாத வாடகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

இந்த போராட்டத்தில் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட உழவர்கள், நில உரிமையாளர்கள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் ஆகிய அமைப்பினர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!