வாழ்வாதாரம் இழக்கும் விவசாயிகள்: முதல்வரிடம் மனு வழங்க முடிவு

வாழ்வாதாரம் இழக்கும் விவசாயிகள்: முதல்வரிடம் மனு வழங்க முடிவு
X

தாராபுரத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற, பல்வேறு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள்.

விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் குறித்து, முதல்வரிடம் மனு கொடுக்க விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் முடிவெடுத்துள்ளனர்.

தாராபுரத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், தனியார் திருமண மண்டபத்தில், 13 மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன், தலைமை வகித்தார். சங்கத்தின் கொள்கை பரப்பு செயலாளர் சிவகுமார், பொது செயலாளர் விசுவநாதன், ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்கள்:

திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் வழியாக உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், விவசாயிகள் பலர், விவசாய நிலங்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என தேர்தலுக்கு முன், முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, அந்தந்த மாவட்ட விவசாயிகள் சார்பில், முதல்வருக்கு மனு வழங்குவது எனவும், முதல்வரை நேரில் சந்திந்து குறைகளை சொல்வது என முடிவெடுக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!