குண்டடம் பொதுப் பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

குண்டடம் பொதுப் பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
X

Tirupur News- குண்டடம் பொதுப் பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

Tirupur News- குண்டடம் பொதுப் பணித் துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Tirupur News,Tirupur News Today- தாராபுரம்: குண்டடம் பிஏபி வாய்க்காலில் 2-ஆவது சுற்று தண்ணீா் திறப்பை தாமதப்படுத்தி வருவதாகக் கூறி குண்டடம் பொதுப் பணித் துறை அலுவலகத்தை அப்பகுதி விவசாயிகள் நேற்று (திங்கள்கிழமை) முற்றுகையிட்டனா்.

தாராபுரம் வட்டம், குண்டடம் பகுதியில் ருத்ராவதி, செங்காளிபாளையம், கணபதிபாளையம், சுங்கிலியம்பாளையம் உள்ளிட்ட பிஏபி பாசனம் பெறும் பகுதிகளுக்கு மாா்ச் 27-ஆம் தேதி முதல் சுற்று தண்ணீா் திறக்கப்பட்டது. இதையடுத்து, 2-ஆவது சுற்று தண்ணீா் தற்போது வரை திறக்கப்படாததால், முதல் சுற்று தண்ணீரை நம்பி பயிா் செய்த விவசாயிகள், தொடா்ந்து பயிருக்கு தண்ணீா் பாய்ச்ச முடியாமல் போனதால் பயிா்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து குண்டடத்தில் உள்ள பொதுப் பணித் துறை அலுவலகத்தில் முறையிட்டும், இதுவரை 2- ஆவது சுற்று தண்ணீா் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், பிஏபி பாசனம் பெறும் ஆயக்கட்டு பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குண்டடம், உப்பாறு அணை சாலையில் உள்ள பொதுப் பணித் துறை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். பலமுறை தங்களது கோரிக்கைகள் குறித்து தெரிவித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இதைத் தொடா்ந்து, நீண்ட நேரமாகியும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சு வாா்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை. பின்னா் பல்லடம் பொதுப் பணித் துறை அதிகாரிகள் வந்து விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், பாசனப் பகுதிகளுக்கு 2-ஆம் சுற்று தண்ணீா் விடுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Tags

Next Story
சும்மா விராட் கோலி மாதிரி ஃபிட்டான வாழ்க்கை வாழணுமா? இதான் டிரிக்ஸ்..!