மூலனூர்; மானியத்தில் காய்கறிநாற்று பெற விவசாயிகளுக்கு அழைப்பு
Tirupur News,Tirupur News Today- காய்கறி நாற்றுகள் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- மூலனூர் வட்டாரத்தில் மானியத்தில் விவசாயிகளுக்கு காய்கறி நாற்றுகள் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மூலனூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் செல்வக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மூலனூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தோட்டக்கலை மற்றும் மலை பயிர் துறை திட்டங்களை பயன்பெற https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணையதளம் வாயிலாக அல்லது மூலனூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2023-24 கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம ஊராட்சிகள் பெரமியம், எரசனம் பாளையம் பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன்பெறலாம். இதில் 300 பயனாளிகளுக்கு தலா 5 விதமாக பழச்சாகுபடி காய்கறிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய் நாற்றுகள் மானியத்தில் பெறலாம்.
மேலும் பண்ணை குட்டை அமைத்தல், குறைந்த விலையில் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல், தேனீ வளர்த்தல், நகரும் காய்கறி வண்டிகள்,குளிரூட்டப்பட்ட வண்டி ஆகியவை குறைந்த விலையில் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட வண்டி வாங்க மானியம் வழங்கப்படும். பெண் விவசாயிகளுக்கு மட்டும் சிறிய அளவிலான காளான் உற்பத்திக் கூடம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மொத்த செலவினம் ரூ. 2 லட்சம் ஆகும். இதற்கான 50 சதவீத மானியமாக ரூ.ஒரு லட்சம் வழங்கப்படுகிறது.
எனவே, காளான் உற்பத்தி கூடம் அமைக்கும் பெண் விவசாயிகள் மட்டும் மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம். தோட்டக்கலைத்துறை அலுவலர்களை 9677776214, 9790526223 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu