தாராபுரத்தில் போலி டாக்டர் கைது: போலீசார் விசாரணை

தாராபுரத்தில் போலி டாக்டர் கைது: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

தாராபுரத்தில் போலி டாக்டர் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள கொளத்துப்பாளையம் ராஜ வீதியை சேர்ந்த ஜெயராஜ் வயது 77. இவர் தனது வீட்டில் ஹோமியோபதி மருத்துவ மனை என்ற பெயரில் அலோபதி மருத்துவம் பார்ப்பதாக தாராபுரம் அரசு தலைமை மருத்துவர் சிவபாலன்னுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து தலைமை மருத்துவர் சிவபாலன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கொளத்துப்பாளையம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஹோமியோபதி மருத்துவர். ஜெயராஜ் அலோபதி மருந்துகளை பயன்படுத்தி மருத்துவம் பார்த்ததை கையும் களவுமாக பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஹோமியோபதி படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது மருத்துவர் சிவபாலன் கொடுத்த புகாரின்பேரில் தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் தனராசு, ஆய்வாளர் மணிகண்டன், மற்றும் போலீசார் ஜெயராஜ்ஜை கைது செய்து அவரிடமிருந்து அலோபதி மருந்துகளை பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!