15 வார்டுக்கு தேர்தல்; 13 வார்டுகளில் போட்டியின்றி தேர்வு!

15 வார்டுக்கு தேர்தல்; 13 வார்டுகளில் போட்டியின்றி தேர்வு!
X
‘‘அடடே...இப்படியும் ஒரு தேர்தல் நடக்குமா? என, ஆச்சர்யப்படும் அளவுக்கு ஒரு சம்பவம் தாராபுரம் அருகேயுள்ள ஒரு பேரூராட்சியில் நடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் உள்ள, சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில், முதல் வார்டில், பா.செல்வி (தி.மு.க ), 2வது வார்டில், கா.செல்வி (தி.மு.க ), 3வது வார்டில் சிவக்குமார் (அ.தி.மு.க ),4வது வார்டில், கோ.மகுடீஸ்வரி (மா.கம்யூனிஸ்ட்), 5வது வார்டில், இரா.கோவிந்தராஜ் (தி.மு.க.) ஆகியோர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.

மேலும், 6வது வார்டில், செ.கன்னீஸ்வரி (தி.மு.க), 8வது வார்டில், ஆ.மீனாட்சி (தி.மு.க ), 9வது வார்டில், கமலம் (சுயேச்சை), 10வது வார்டில், நா.பிரதாப் மூர்த்தி (தி.மு.க), 11வது வார்டில், நா.சுரேஷ்குமார் (அ.தி.மு.க ), 13வது வார்டில், ஈ.முருகம்மாள் (அ.தி.மு.க), 14வது வார்டில், சு.பிரியங்கா (அ.தி.மு.க), 15வது வார்டில், மகுடீஸ்வரி (அ.தி.மு.க) போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர்.

அட, உள்ளாட்சித் தேர்தலில் இப்படியெல்லாம் கூட வெற்றி கைகூடுமாநடக்குமா? என, இந்த தேர்தல், தாராபுரம் மக்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!