தாராபுரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி கல்வி மற்றும் கலாசார விழா

தாராபுரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி கல்வி மற்றும் கலாசார விழா
X

தாராபுரத்தில் நடந்த கலாச்சார விழாவில் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி மற்றும் கலை விழா ரோட்டரி மகாலில் நடந்தது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி மற்றும் கலை விழா ரோட்டரி மகாலில் நடந்தது.இதில் கட்டுரைப்போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். மகாராணி கல்லூரி மாணவர்கள் பல பரிசுகளை வென்றனர். அவர்களை கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் ஊக்கப்படுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் மகாராணி கல்வி நிறுவன தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் சுலைமான், துணைத்தலைவர் தமிழரசன், இயக்குனர் அப்துல் ரஹிமான், கல்வியியல் கல்லூரி முதல்வர் கே. மாரீஸ், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் எஸ். தமிழ்செல்வி, கல்வியியல் கல்லூரி பேராசிரியர் என். கவுரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் ரவிக்குமார், கல்வியியல் கல்லூரி மாணவர்கள் கனிமொழி, காவியப்பிரியா, கிருத்திகா, மணிமேகலை, நான்சிகிருபா, ஷெரின்ரீனு, கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சினேகா, உமா உள்படபலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!