தூய்மைப்பணியாளர்கள் ஸ்டிரைக்: தாராபுரத்தில் 'கப்ஸ்' தாங்கல!

தூய்மைப்பணியாளர்கள் ஸ்டிரைக்:  தாராபுரத்தில் கப்ஸ் தாங்கல!
X

தூய்மைப்பணியாளர்களின் வேலைநிறுத்தத்தால்,  தாராபுரத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள்.

தூய்மைப்பணியாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, தாராபுரத்தில் குப்பைக்கழிவுகள் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில், 30 வார்டுகள் அமைந்துள்ளன. நகராட்சியில் 5000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் சேகரமாகும் குப்பைகள், தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி, 15 நாட்களாக தூய்மைப்பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைநிறுத்தம் காரணமாக தாராபுரம் கடைவீதி, அலங்கியம் ரோடு, உடுமலை ரோடு, பொள்ளாச்சி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தேக்கமடைந்துள்ளன.

தேங்கிக்கிடக்கும் குப்பைகளால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. தாராபுரம் பகுதியில் இவ்வாறு குவிந்து கிடக்கும் குப்பைகளால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள், குப்பைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags

Next Story