/* */

ஜிஎஸ்டி வரி உயர்வு: தாராபுரத்தில் ஜவுளிக்கடைகள் அடைப்பு

ஜி.எஸ்.டி., வரி உயர்வை கண்டித்து, தாராபுரத்தில் ஜவுளிக்கடைகளை அடைத்து, போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஜிஎஸ்டி வரி உயர்வு: தாராபுரத்தில் ஜவுளிக்கடைகள்  அடைப்பு
X

கோப்பு படம் 

ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி., வரியை, வரும் ஜனவரி, முதல் தேதியில் இருந்து, 5 சதவீதத்தில் இருந்து, 12 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதற்கு ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஜவுளிக்கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜி.எஸ்.டி., வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று, ஜவுளி கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் மற்றும் டெய்லர்கள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 150க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

தாராபுரம் ஜவுளிக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகவேல் தலைமையில், வியாபாரிகள் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் ஜி.எஸ்.டி. வரியை குறைக்க கோரி, கோட்டாட்சியரிடம் மனு வழங்கினர்.

Updated On: 24 Dec 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு