தாராபுரத்தில் ரூ.3.36 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பறிமுதல்

தாராபுரத்தில் ரூ.3.36 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பறிமுதல்
X

தாராபுரம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ரூ.3.36 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த பாப்பம்பாளையம் தண்ணீர்பந்தல் பகுதியில் சண்முகம்,69, என்பவர் மளிகை கடையில் 200. பண்டல் போலி பீடி, 33, மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலி பீடி விற்பனை சூடுபிடித்தை தொடர்ந்து, தாராபுரம் டிஎஸ்பி தனராசு உத்தரவின் பேரில், போலீஸார் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். இதில், தாராபுரத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.3, லட்சத்து 36, ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் 38, ஆயிரத்து 800, ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!