தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி

தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி
X

மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படையினர்.

திருப்பூர் மாவட்டம், அமராவதி ஆற்றில் மூழ்கி, ஆறு பேர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் இடுவாய், அண்ணாமலை கார்டன் பகுதியை சேர்ந்த 30 பேர், திண்டுக்கல் மாவட்டம் மாம்பாறையில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இன்று காலை, 7 மணிக்கு கிளம்பி சென்றுள்ளனர். நிகழ்ச்சியை முடித்துவிட்டு, தாராபுரம் வழியாக திருப்பூர் வந்துள்ளனர். வரும் வழியில் மாலை 4 மணிக்கு தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில்,குளிக்க சென்றனர்.

அதில் ஒருவர் ஆழமான பகுதிக்கு செல்ல, நிலைத்தடுமாறி தண்ணீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக, 8 பேர் செல்ல, அடுத்தடுத்து அவர்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். தகவல் தெரிந்து, தாராபுரம் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், சரண், ஜீவா ஆகிய இருவரையும் உயிருடன் மீட்டனர். மோகன் 17, ரஞ்சித் 20, அமிர்தகிருஷ்ணன் 18, யுவன் 19, சக்கரவர்மன் 18, ஸ்ரீதர் 17, ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். அவர்களை தீயணைப்புத்துறையினர் சடலமாக மீட்டனர். இதுகுறித்து, தாராபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future