போலி விதை கண்டறிய உஷார்படுத்தும் அதிகாரிகள்

போலி விதை கண்டறிய உஷார்படுத்தும் அதிகாரிகள்
X

பைல் படம்.

போலி விதை கண்டறிவது தொடர்பாக விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தாராபுரம் குண்டடம் பகுதியில், சின்ன வெங்காயம் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் போலி விதைகளை பயன்படுத்தி, நஷ்டம் அடைவதை தவிர்க்க, விவசாயிகளுக்கு வேளாண்மை துறை அலுவலகத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

விதை ஆய்வு உதவி இயக்குனர் ஜெயராமன் கூறியதாவது;

விவசாயிகள், விதைகளை வாங்கும் போது தரச்சான்று, குழுமம் எண், விதை தரம், காலாவதி தேதி உள்ளிட்டவைகள் பதியப்பட்டுள்ளதா என கவனித்து வாங்க வேண்டும். வாங்கிய விதைக்கு உரிய ரசீது பெற வேண்டும்.

விதை விற்பனையாளர்களும் இந்த விவரங்களை குறிப்பிட்டு விதை வாங்கும் விவசாயிகளிடம் கையொப்பம் வாங்கி இருக்க வேண்டும். விதை கொள்முதல், பதிவு சான்று, விதை முளைக்கும் திறன் அறிக்கை ஆகியவற்றை பதிவேட்டில் முறையாக பராமரிக்க வேண்டும். இதனை மீறுவோர் மீது விதை சட்டம் மற்றும் விதை கட்டுப்பாடு ஆணையின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

முகாமில், வேளாண்மை உதவி இயக்குனர் பழனிகுமார், தோட்டக்கலை உதவி இயக்குனர் மோகனா, விதை ஆய்வாளர்கள் விஜயா, நவீன், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai in future agriculture