மகளை கொன்று தாய் தற்கொலை தாராபுரம் அருகே நேர்ந்த துயர சம்பவம்

மகளை கொன்று தாய் தற்கொலை  தாராபுரம் அருகே நேர்ந்த துயர சம்பவம்
X

தாராபுரத்தை அடுத்துள்ள அலிங்கயம் காமராஜர் நகரில், தனது 10வயது மகள் வர்ஷாவை துாக்கிலிட்டு கொன்றுவிட்டு, தற்கொலை செய்துகொண்ட தாய் பூங்கொடி.

தாராபுரத்தை அடுத்துள்ள அலிங்கயம் பகுதியில், 10 வயது மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியது.

தாராபுரத்தை அடுத்துள்ள அலிங்கயம் பகுதியில், 10 வயது மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள அலிங்கயம், காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் பூங்கொடி, 28வயது இவரது கணவர் காளிதாஸ், சில ஆண்டுகளுக்கு முன் துாக்கு போட்டு இறந்துவிட்டார். தனது 10வயது மகள் வர்ஷாவுடன், பூங்கொடி, தனது தாயாருடன் வசித்து வந்தார். தாராபுரத்தில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில், வேலை செய்து வந்த அவர், சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல், குரூப் 4 தேர்வுக்காக, வீட்டில் இருந்து படித்தார். மகள் வர்ஷா, அருகில் உள்ள அரசுபள்ளியில் 5ம் வகுப்பு படித்தார்.

வேலைக்கு செல்லாமல் விீட்டில் இருந்ததால், வறுமை ஏற்பட்டு பூங்கொடி, மகளுடன் சிரமப்பட்டுள்ளார். இந்நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த பூங்கொடி இன்று, மகள் வர்ஷாவை, வீட்டில், சேலையில் துாக்கிட்டு கொலை செய்துவிட்டு, தானும், துாக்கு மாட்டி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து, அங்கு சென்ற அலிங்கயம் போலீசார், சடலங்களை கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயும், மகளும் இறந்த சம்பவமும், நேற்று குரூப் 4தேர்வு எழுதிய நிலையில், இன்று பூங்கொடி தற்கொலை செய்து கொண்டதும் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியது.



Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!