தாராபுரம் நகராட்சியில் ரூ. 3.17 கோடியில் வளர்ச்சிப் பணிகள்; கவுன்சிலர்கள் கூட்டத்தில் தகவல்

தாராபுரம் நகராட்சியில் ரூ. 3.17 கோடியில் வளர்ச்சிப் பணிகள்;  கவுன்சிலர்கள் கூட்டத்தில் தகவல்
X

Tirupur News- தாராபுரம் நகராட்சி அலுவலகம் (கோப்பு படம்)

Tirupur News- தாராபுரம் நகராட்சியில் திட்ட குழு நிதியிலிருந்து ரூ.1.52 கோடி மதிப்பில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பொது நிதியிலிருந்து ரூ.1.65 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் ரூ.3.17 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Tirupur News,Tirupur News Today- தாராபுரம் நகராட்சி கவுன்சிலருக்கான ஆய்வுக் கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் தலைமை வகித்தார். ஆணையர் பாரிஜான், துணைத்தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மன்ற பொருளாக 89 தீர்மானங்கள் வைக்கப்பட்டது.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு

துரைசந்திரசேகரன் (தி.மு.க.): எனது வார்டில் சி.எஸ்.ஐ.காம்பவுண்டில் சாக்கடை வசதி இல்லை. தண்ணீர் தேங்கி நிற்கிறது. நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தலைவர் பாப்பு கண்ணன்: நோட்டீஸ் அனுப்பலாம்.

நாகராஜ் (அ.தி.மு.க.): தாராபுரம் நகராட்சி பகுதி ஓட்டல்களில் விலை பட்டியல் வைப்பதில்லை.மேலும் பஸ் நிலையம் பகுதியில் சாப்பிட்ட பிறகு பில் கொடுப்பதில் தகராறு ஏற்படுகிறது.தலைவர்: இது குறித்து தொழிலாளர் நலன் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்படும்.

முருகானந்தம் (தி.மு.க.): பல லட்சம் மதிப்பில் தாராபுரம் ஹவுசிங் யூனிட்டில் அண்மையில் கட்டப்பட்ட பூங்காவில் செடி கொடிகள் முளைத்து சீர் கெட்டு உள்ளது.மேலும் எனது வார்டில் தெரு ஓரங்களில் மரம் முளைத்துள்ளதால் பள்ளி பஸ்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளது.

தலைவர்: நகராட்சி பூங்கா உடனடியாக சீரமைக்கப்படும் மரங்களை வெட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில் 89 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அப்போது நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் கூறியதாவது,

திட்ட குழு நிதியிலிருந்து ஒரு கோடியே 52 லட்சம் மதிப்பில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பொது நிதியிலிருந்து ஒரு கோடியே 65 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ரூ.3.17 கோடிக்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கருணாநிதி உருவச் சிலையை தாராபுரம் பழைய நகராட்சி பகுதியிலோ அல்லது பெரியார் உருவ சிலை அருகே வைப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!