100 ஏக்கர் பரப்பில், மக்காச்சோளம் பயிர் நாசம்

100 ஏக்கர் பரப்பில், மக்காச்சோளம் பயிர் நாசம்
X

சேதமடைந்த மக்காசோளம் பயிர்.

தாராபுரத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் பயிர், சேதமடைந்தது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. அதிகபட்சம், 200 மி.மீ., வரை கூட மழை பதிவானது. இதனால், தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில், 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப்பயிர், சாய்ந்தது. 'ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து, மக்காச்சோளம் பயிரிட்ட நிலையில், மழையால், பயிர் முற்றிலும் சேதமடைந்திருப்பது, கவலையளிக்கிறது. வேளாண் துறை அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி, நிவாரணம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்