/* */

தாராபுரத்தில் கலெக்டர் ஆய்வு

Tirupur News- உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ், தாராபுரத்தில் கலெக்டர் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

தாராபுரத்தில் கலெக்டர் ஆய்வு
X

Tirupur News- தாராபுரம் பகுதியில் ஆய்வு நடத்திய கலெக்டர் கிறிஸ்துராஜ். 

Tirupur News,Tirupur News Today- உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ், திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் 2- ஆவது நாளாக ஆய்வு மேற்கொண்டாா்.

தாராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட நகராட்சி பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரப் பணிகள் குறித்தும், பேருந்து நிலையம் மேம்படுத்தப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, தாராபுரம் உழவா் சந்தையில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

நஞ்சியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத்திட்டம், நஞ்சியம்பாளையம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டாா். தாராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் 67 மாவட்ட அளவிலான அரசுத் துறை அலுவலா்கள் மூலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 2 நாள்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் செந்தில் அரசன், பொதுமேலாளா் (ஆவின்) சுஜாதா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

Updated On: 23 Feb 2024 5:36 PM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
 2. லைஃப்ஸ்டைல்
  எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
 3. லைஃப்ஸ்டைல்
  மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
 4. மானாமதுரை
  வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
 5. லைஃப்ஸ்டைல்
  அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
 6. லைஃப்ஸ்டைல்
  பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
 7. குமாரபாளையம்
  பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
 8. லைஃப்ஸ்டைல்
  நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
 9. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
 10. கிணத்துக்கடவு
  கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்