தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் கலெக்டர் திடீர் ஆய்வு

தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  திருப்பூர் கலெக்டர் திடீர் ஆய்வு
X

தாராபுரம் வட்டாட்சியர் அலுவலக்த்தில் ஆய்வு மேற்கொண்ட திருப்பூர் கலெக்டர் வினீத்.

தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாவட்டத்தில், 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தின் கீழ், 25 ஆயிரம் மனுக்கள் வரை பெறப்பட்டன. இந்த மனுக்கள் பிரித்து, தீர்வு காணும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம், குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் இன்று திடீரென ஆய்வுக்கு சென்றார். 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், தாசில்தார், துணை தாசில்தாரிடம் மக்களின் குறைகள் தொடர்பாக உடனடியாக தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு, கலெக்டர் வினீத் அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story
ai platform for business