அவினாசி, தாராபுரத்தில் அனுமதியின்றி சேவல் சண்டை: 23 பேர் கைது

அவினாசி, தாராபுரத்தில் அனுமதியின்றி சேவல் சண்டை: 23 பேர் கைது
X

பைல் படம்.

அவினாசி, தாராபுரத்தில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியதாக 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் சேவக்கட்டு நடத்த அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும், சட்ட விரோதமாக பல கிராமப்புறங்களில் சேவல் சண்டை நடத்தப்படுகிறது.

இந்நிலையில், தாராபுரத்தில் சேவல் சண்டை நடத்தியதாக 17 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் அவினாசியிலும் ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்த பணம் மற்றும் சேவல்கள் பறிமுதல் செய்யபட்டன. குறிப்பாக இளைஞர்கள் தான் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துகின்றனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா