குண்டடம் பகுதியில் மிளகாய் சாகுபடி; விவசாயிகள் ஆர்வம்
Tirupur News,Tirupur News Today- குண்டடம் பகுதியில் பச்சை மிளகாய் சாகுபடி அதிகரித்துள்ளது (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதிகளாக காணப்படுகின்றன. குண்டடம் சுற்றுவட்டார பகுதிகளான குண்டடம், ருத்ராவதி, சூரியநல்லூர், முத்தனம்பட்டி உள்பட பல கிராமங்களில் உள்ள விவசாயிகள் குறைந்த தண்ணீரை கொண்டு நிறைந்த லாபம் தரும் பயிர்களான வெங்காயம், கத்திரி, தக்காளி, மிளகாய் ஆகியவற்றை பயிர் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது விவசாயிகள் அதிகளவில் மிளகாய் செடி ரகங்களான கருங்காய், உருண்டை, சம்பா போன்ற மிளகாய் செடிகளை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். மிளகாய் செடி 1 ஏக்கர் சாகுபடி செய்ய விதை, நடவு கூலி, உரம் உள்ளிட்ட ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்கின்றனர். 5 மாதம் வரை காய் பிடிக்கும். நல்ல மகசூல் கிடைத்தால் ஏக்கருக்கு 5 மாதங்களுக்கு 10 டன் வரை உற்பத்தி கிடைக்கிறது.
30 நாட்களில் காய் பிடிக்கத்தொடங்குகிறது. காய்ப்பிடித்த நாளிலிருந்து 12 நாட்களுக்கு ஒரு முறை காய்களை ஆட்கள் மூலம் கூலி கொடுத்து பறித்து மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரும்போது வாடகை சுங்கம் என 1 கிலோவுக்கு 10 ரூபாய் என, விவசாயிகளுக்கு செலவு ஏற்படுகிறது. மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் வந்து வாங்கிச்செல்கின்றனர்.
இந்த விலையில் கடந்த 2 மாதங்களாகவே மிளகாய் கிலோ ரூ.80 முதல் ரூ.102 வரை விற்பனை ஆகி வருகிறது. இதன்மூலம் மிளகாய் விற்பனையில் நல்ல லாபம் ஈட்டி வருவதால், எதிர்வரும் காலங்களிலும் நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்த்து குண்டடம் பகுதி விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மிளகாய் சாகுபடி செய்துள்ளனர். தற்போது மிளகாய் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையாகி வருகிறது.
கடந்த ஒரு மாதமாக தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றுடன் பச்சை மிளகாய் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதனால், சமையலில் தக்காளியை போலவே மிக முக்கியமானதாக உள்ள பச்சை மிளகாய் விலையும் வரும் நாட்களில், கணிசமாக உயர வாய்ப்புள்ளதால், குண்டடம் பகுதி விவசாயிகள், பச்சை மிளகாய் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu