கன்னிவாடி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்; அமைச்சா் ஆய்வு

கன்னிவாடி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்; அமைச்சா் ஆய்வு
X

Tirupur News- கன்னிவாடி, வெள்ளகோவில் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது (கோப்பு படம்)

Tirupur News- கன்னிவாடி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் அமைச்சா் ஆய்வு மேற்கொண்டார்.

Tirupur News,Tirupur News Today- கன்னிவாடி பேரூராட்சியில் நடந்த மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.

தாராபுரம் வட்டம், கன்னிவாடி பேரூராட்சியில் உள்ள மொத்தம் 12 வாா்டுகளின் பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் கன்னிவாடியில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

இதில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை, தொழிலாளா் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் அலுவலா்கள் பங்கேற்றனா். இதில், பொதுமக்களிடம் இருந்து 200 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இந்த முகாமை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டு, முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதில், கன்னிவாடி பேரூராட்சித் தலைவா் ரேவதி சுரேஷ், துணைத் தலைவா் சீதாமணி வடிவேல், மூலனூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் ப.பழனிசாமி, கன்னிவாடி பேரூா் திமுக செயலாளா் சுரேஷ், தலைமை செயற்குழு உறுப்பினா் கே.எஸ்.தனசேகா், கன்னிவாடி பேரூா் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் மயில்வாகனன், அரசுத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

வெள்ளக்கோவிலில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

வெள்ளக்கோவிலில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் நடைபெற்றது. நகராட்சி 14 வாா்டு முதல் 20 வாா்டுகள் வரையிலான 7 வாா்டுகளுக்காக நடைபெற்ற இந்த முகாமில், மொத்தம் 992 மனுக்கள் பெறப்பட்டன. நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துகுமாா் கோரிக்கை மனுக்களுக்கான ஒப்புகைச் சீட்டுகளை வழங்கினாா். 17 அரசுத் துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் முகாமில் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன் மற்றும் பல துறை அதிகாரிகள் செய்திருந்தனா்

Tags

Next Story
the future with ai