தாராபுரத்தில் நன்றி தெரிவித்து வைத்த பேனரில் பாஜ.,தலைவர் முருகன் படம் கிழிப்பு

தாராபுரத்தில் நன்றி தெரிவித்து வைத்த  பேனரில் பாஜ.,தலைவர்  முருகன் படம் கிழிப்பு
X
தாராபுரத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பாஜ., சார்பில் வைக்கப்பட்ட பேனரில் பாஜ.,தலைவர் எல்.முருகன் படம் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டசபை தொகுதியில் அதிமுக., கூட்டணியில் பாஜ., வில், எல் முருகன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தொகுதியில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், நன்றி அறிவிப்பு பேனர் அண்ணா சிலை அருகே வைக்கப்பட்டது.

இதை அதிமுக நகர செயலாளர் காமராஜ் இதற்கான ஏற்பாடு செய்திருந்தார். அதேபோல் திமுக., சார்பில் அங்கு நன்றி அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பேனரில், எல்.முருகன் படம் மட்டும் கிழிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து தகவல் அறிந்த அதிமுக., உள்ளிட்ட கூட்டணி கட்சியில் அண்ணா சிலை அருகே கூடினர். தாராபுரம் போலீஸார், பேச்சு வார்த்தை நடத்தி பின், சுமூகமாக அனைவரும் கலைந்து சென்றனர். சம்பவத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!