அடிப்படை வசதி அறவே இல்லை! அமைச்சரிடம் புகார் மனு

அடிப்படை வசதி அறவே இல்லை!  அமைச்சரிடம் புகார் மனு
X

அடிப்படை வசதி வேண்டி அமைச்சர் கயல்விழியிடம் மனு வழங்கப்பட்டது.

‘தாராபுரத்தில், அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும்’ என ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழியிடம் வழங்கப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது:

30வது வார்டு பகுதியில் சாக்கடை வசதி, கான்கிரீட் சாலை இல்லாததால், மக்கள் சிரமப்படுகின்றனர். அங்குள் பாழடைந்த கிணற்றை உடனடியாக மூட வேண்டும். 5 மற்றும், 6 வது வார்டில், சமுதாயக்கூடம் அமைத்துத்தர வேண்டும். ஜின்னா மைதானம் பகுதியில் உள்ள காலியிடத்தில், கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து விளக்கப்பட்டிருந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!