தாராபுரத்தில் சமரச மக்கள் நீதிமன்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி

தாராபுரத்தில் சமரச மக்கள் நீதிமன்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி
X

தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், மக்கள் நீதிமன்றம் குறித்து  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் சமரச மக்கள் நீதிமன்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதை தவிர்க்கவும், உரிய நேரத்தில் நீதி கிடைக்கவும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளில் எளிதாக தீர்வு காணவும், லோக் அதலாத் எனப்படும் 'சமரச மக்கள் நீதிமன்றம்' நடத்தப்படுகிறது.

இதுதொடர்பான, கண்காட்சி, பேரணி நடைபெற்றது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தாராபுரம் கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற வளாகத்தில் சமரச மக்கள் நீதிமன்றம் சம்பந்தமான விழிப்புணர்வுக் ஒலி ஒளி காட்சி காண்பிக்கப்பட்டது.

முன்னதாக, தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி தர்மபிரபு, மரக்கன்று நட்டு வைத்தார். பின், மக்கள் செய்தி தொடர்பு வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இதில், மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சி.குமார் சரவணன், குற்றவியல் நீதிமன்றம் நடுவர் பாபு, மாவட்ட உரிமையியல் நீதிபதி செல்வி ஏக்னஸ் ஜெபகிருபா உட்பட, கல்லூரி மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள், போலீசார் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!