தாராபுரம் பள்ளியில் 15 பேருக்கு கொரோனா!

தாராபுரம் பள்ளியில் 15 பேருக்கு கொரோனா!
X
தாராபுரத்தில் செயல்படும் பள்ளி மாணவர்களில், 15க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

தாராபுரத்தில் செயல்படும் பள்ளி மாணவர்களில், 15 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் சில நாட்களாக கொரோனா தொற்றுப்பரவல் வேகமாக பரவி வருகிறது. தவிர, தொடர்ந்து மழையும் பெய்து வருவதால், சளி, காய்ச்சல் போன்ற உடல் உபாதைகளால் மக்கள் பாதித்துள்ளனர்.

இந்நிலையில், வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி தலைமையில், அலங்கியம் பொன்னாபுரம் பகுதியில், தினமும், 500 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், அங்குள்ள தனியார் பள்ளியில், 15க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!