அரசு மருத்துவமனையில் வேரோடு சாய்ந்த மரம்
பைல் படம்.
பல்லடத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனை வளாகத்தில் சுமார் 60 ஆண்டுகள் பழமையான பூவரச மரம் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று திடீரென வீசிய காற்றின் வேகம் காரணமாக பூவரச மரமானது வேரோடு பெயர்ந்து மருத்துவமனையின் நடைபாதையில் குறுக்காக விழுந்தது.
அப்போது நோயாளிகளோ, பார்வையாளர்களோ யாரும் உள்ளே செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம், மற்றும் விபத்து ஏற்படவில்லை. மேலும் மரம் பாதையின் குறுக்காக விழுந்ததால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே செல்ல முடியாமலும், பார்வையாளர்கள் வெளியே செல்ல முடியாமலும் தவிப்புக்குள்ளாகினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் மரம் அகற்றப்பட்டு பாதை சரி செய்யப்பட்டது. பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் 60 ஆண்டு பழமையான பூவரச மரம் காற்றுக்கு வேரோடு சாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu