தாராபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.24 கோடியில் கூடுதல் கட்டிடங்கள்; அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு
Tirupur News,Tirupur News Today- தாராபுரம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தார்.
Tirupur News,Tirupur News Today- தாராபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.24 கோடியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடப்பணிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறியதாவது,
முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தாராபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.24 கோடியில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் தாராபுரம் அரசு மருத்துவமனையில் தரைத்தளத்தில் வரவேற்பறை, கதிரியக்க அறை சி.டி.ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் அறை ஆய்வகம் 2 எண்ணிக்கையிலும், அல்ட்ரா கதிர்வீச்சு அறை வெளிப்புற நோயாளிகளுக்கான இருதய சிகிச்சை அறை மற்றும் மருந்தக இருப்பு அறைகளும் கட்டப்படுகிறது.
பெண்களுக்கான சிகிச்சை பிரிவு முதல் தளத்தில் டயாலிசிஸ் வார்டு, பணி மருத்துவர் அறை, பணி செவிலியர் அறை, தீவிர சிகிச்சை பிரிவு பதிவறை, |மருந்து இருப்பு அறை, சாய்தளம் கழிவறை வசதிகள். 2-ம் தளத்தில் அறுவை அரங்கு 2-ல் நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு தயார்படுத்தும் அறை, பணி மருத்துவர் அறை பணி செவிலியர் அறை, கழிவறை மற்றும் சாய்தள வசதிகள். 3-ம் தளத்தில் பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு (எலும்பு பிரிவு) ஆண்களுக்கான அறுவை சிகிச்சை வார்டு மருத்துவ சிகிச்சை பிரிவு, பணி மருத்துவர்அறை, பணி செவிலியர் அறைகள். குழந்தைகளுக்கான பிரிவு அமைக்கப்படுகிறது.
அதே போல், 4-ம் தளத்தில் ஆண்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு (எலும்பு பிரிவு) பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு, பணி மருத்துவர்அறை, பணி செவிலியர் அறை சாய்தளம் கழிவறை வசதிகள். 5-ம் தளத்தில் குழந்தைகளுக்கான பிரிவு, காப்பீடு திட்ட பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்கள் பணி மருத்துவர் அறை, பணி செவிலியர் அறை, சாய்தளம் கழிவறை வசதிகள். 6-ம் தளத்தில் கண் சிகிச்சை பிரிவு (ஆண்கள் மற்றும் பெண்கள்) ரத்த வங்கி, கூட்ட அரங்கம், சாய்தளம் கழிவறை வசதிகளுடனும் கட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன், செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) தியாகராஜன், அரசு டாக்டர் சத்தியராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu