விபத்தில் உயிரிழந்த குடும்பம்: 2.15 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

விபத்தில் உயிரிழந்த குடும்பம்: 2.15 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
X
தாராபுரத்தில், விபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு, 2.15 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அண்ணநகரை சேர்ந்தவர் சுரேஷ், 32. இவரது மனைவி சங்கீதா; இருவரும், சென்னையில் உள்ள வேளச்சேரியில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தனர். கடந்த, 7.11.2015 அன்று, சென்னையில் இருந்து கார் மூலம், தாராபுரம் நோக்கி இவர்கள் வந்துக்கொண்டிருந்த போது, நள்ளிரவு, 12:00 மணிளவில், தாராபுரம் காங்கயம் சாலையில் உள்ள குள்ளாய்பாளையம், வெட்டுக்காடு தோட்டம் அருகே உள்ள மரத்தில் மோதி, கார் விபத்துக்குள்ளானது.

விபத்தில், சுரேஷ், சங்கீதா, சுரேஷின் தாய், செல்வி, 60 ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். விபத்து குறித்து தாராபுரம் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில், உயிரிழந்த சுரேஷூக்கு, 1.17 கோடி ரூபாய், சங்கீதாவுக்கு, 87.52 லட்சம், செலவிக்கு, 8.60 லட்சம் உட்பட காயமடைந்த அவர்களின் குழந்தைக்கு, 1.52 லட்சம் ரூபாய் என, மொத்தம் 2.15 கோடி ரூபாய் ரூபாய் இழப்பீடு பெற்றுத்தர, நீதிபதி குமார் சரவணன் உத்தரவிட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!