கன்னிவாடி பேரூராட்சியில் ரூ.10-க்கு உணவு வழங்கும் ஆற்றல் உணவகம்

Tirupur News-தாராபுரம், கன்னிவாடி பேரூராட்சியில் ரூ.10-க்கு உணவு வழங்கும் ஆற்றல் உணவகம் தொடங்கப்பட்டது.
Tirupur News,Tirupur News Today- தாராபுரம் அருகேயுள்ள கன்னிவாடி பேரூராட்சியில் ரூ.10-க்கு உணவு வழங்கும் ஆற்றல் உணவகம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
கன்னிவாடி வாரச் சந்தை வளாகத்தில் ஆற்றல் அறக்கட்டளை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தை திருப்பூா் புகா் மாவட்ட அதிமுக செயலாளரும், மடத்துக்குளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான சி.மகேந்திரன் தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, ஆற்றல் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் அசோக்குமாா் கூறியதாவது: ஆற்றல் அறக்கட்டளை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு, தற்போது பல்வேறு சமூக நல உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறோம். ஈரோடு, தாராபுரம், காங்கயம், குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் ஏற்கெனவே ஆற்றல் உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
நாள்தோறும் மூன்று வேளை உணவு வழங்கும் இந்த உணவகங்களில் மாதந்தோறும் சுமாா் ஒரு லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனா்.
தற்போது கன்னிவாடி வாரச் சந்தையில் ஆற்றல் உணவகத்தை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் சந்தைக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் பயன்பெறுவா் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மூலனூா் அதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் ராஜரத்தினம், மூலனூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் செல்வகுமாா், கன்னிவாடி செயலாளா் லட்சுமணசாமி, மூலனூா் செயலாளா் வெற்றிவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu