20 ஆண்டுக்கு பின் உப்பாறு அணையில் தண்ணீர் திறப்பு: கரையோர மக்கள் எச்சரிக்கை

20 ஆண்டுக்கு பின் உப்பாறு அணையில் தண்ணீர் திறப்பு: கரையோர மக்கள் எச்சரிக்கை
X

20 ஆண்டுகளுக்குப் பின் திறந்துவிடப்பட்ட உப்பாறு அணை .

உப்பாறு அணையில் தண்ணீர் திறப்பு உப்பாறு அணை, 20 ஆண்டுகளுக்கு பின் திறந்து விடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் உப்பாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. எந்த நேரமும் அணை தண்ணீர் திறந்துவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் , அணை திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 20 ஆண்டுக்கு பின் அணை திறக்கப்பட்டதால், அப்பகுதியில் உள்ள மக்கள், விவசாயிகள் ஆறுதல் அடைந்தனர். வெளியேற்றப்படும தண்ணீர் மூலம், 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் பெறுவர்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!