கஞ்சா கடத்திய இருவர் கைது

கஞ்சா கடத்திய இருவர் கைது
X
தாராபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவர் கைது.

தேனி நத்தம் அருகே உள்ள கிராமங்களில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்து விற்க முயன்ற இரண்டு பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரெண்டு கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள எரகம்பட்டி பகுதியில் காவல் ஆய்வாளர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாராபுரம் காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கோவை மண்டலத்தைச் சேர்ந்த டி.எண். 39 என்ற டிஸ்கவர் இருசக்கர வாகனத்தில் தேனி மாவட்டம் பெரிய குளத்தை சேர்ந்த தொந்தி மகன் முத்துராஜ் வயது 37 மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, மேதர்ஷ மகன் காஜா மைதீன், ஆகியோர் கஞ்சா கடத்தி வருவதாக தகவல் கிடைத்ததை அந்த இரு சக்கர வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தபோது, டேங்க் கவரில் மறைத்து வைத்திருந்த இரண்டு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து தாராபுரம் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு இருவர் மீதும் கஞ்சா வழக்கு பதியப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!