கேஸ் விலை ஏற்றம், அரசுகள் தோல்வி- உதயநிதிஸ்டாலின்

கேஸ் விலை ஏற்றம், அரசுகள் தோல்வி- உதயநிதிஸ்டாலின்
X

கேஸ் விலை ஏற்றத்தால் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்து விட்டதாக தாராபுரத்தில் உதயநிதிஸ்டாலின் தெரிவித்தார் .

கொடைக்கானலில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு ஒட்டன்சத்திரம் வழியாக திமுக மாநில இளைஞரணி செயலாளர் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இரவு 10 மணி அளவில் தாராபுரம் வந்தார். அவருக்கு புறவழிச்சாலையிலுள்ள கல்லூரி அருகே ஒன்றிய திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதிஸ்டாலின், கேஸ் விலை 50 ரூபாய் மத்திய அரசு உயர்த்தியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தொடர்ந்து கேஸ் விலை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது மத்திய, மாநில அரசுகளுக்கு தோல்வி என தெரிவித்தார் .

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!