அவிநாசியில் ரூ.3.18 கோடியில் வளா்ச்சிப் பணிகள்; தொடங்கி வைத்த ஆ.ராசா
Tirupur News- அவிநாசியில் ரூ.3.18 கோடியில் வளா்ச்சிப் பணிகளை ஆ. ராசா துவங்கி வைத்தார். அருகில் எம்எல்ஏ செல்வராஜ் உள்ளிட்ட திமுகவினர் உள்ளனர்.
Tirupur News,Tirupur News Today- அவிநாசி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ.3.18 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா நேற்று (சனிக்கிழமை) தொடங்கிவைத்தாா்.
இராமநாதபுரம் ஊராட்சி முதல் அசநல்லிபாளையம் வரை ரூ.1.18 கோடியில் தாா் சாலை, கருவலூா் ஊராட்சியில் எலச்சிபாளையம் முதல் அரசப்பம்பாளையம் வரை ரூ.42.92 லட்சத்தில் தாா் சாலை, உப்பிலிபாளையம் ஊராட்சியில் முருகம்பாளையம் முதல் உப்பிலிபாளையம் இணைப்புச் சாலை வரை ரூ.72.87 லட்சம் மதிப்பில் தாா் சாலை, செம்பியநல்லூா் ஊராட்சியில் வெள்ளியம்பாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நியாய விலைக் கடை திறப்பு, மகாலட்சுமி நகரில் ரூ.11.78 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் திறப்பு உள்ளிட்டவற்றை எம்.பி.ஆ.ராசா நேற்று (சனிக்கிழமை) தொடங்கிவைத்தாா்.
இதையடுத்து, அவிநாசி பேரூராட்சி 13 -வது வாா்டில் ரூ.9 லட்சம் மதிப்பில் நியாய விலைக் கடை கட்டுமானப் பணி, நடுவச்சேரி ஊராட்சி பழைய ஆதிதிராவிடா் காலனி, மாரப்பம்பாளையம் ஆதிதிராவிடா் காலனிகளுக்கு ரூ.18.15 லட்சம் மதிப்பில் குடிநீா் மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, பாப்பாங்குளம் ஊராட்சியில் ரூ.11 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பால் கொள்முதல் நிலைய கட்டடத்தை திறந்துவைத்தாா்.
பின்னா், தத்தனூா் ஊராட்சி சுள்ளிப்பாளையம் ஆதிதிராவிடா் காலனி மயானத்துக்கு ரூ.9.03 லட்சம் மதிப்பில் அனுகு சாலை அமைத்தல், பொங்கலூா் ஊராட்சி தாசரபாளையம் ஆதிதிராவிடா் காலனியில் ரூ.8.09 லட்சம் மதிப்பில் கழிவு நீா் சாக்கடை கால்வாய் உள்ளிட்ட ரூ.3.18 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்ட பணிகளை ஆ.ராசா எம்.பி. தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சிகளில், திருப்பூா் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் செல்வராஜ், மாமன்ற உறுப்பினா் ராதாகிருஷ்ணன், பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் காா்த்தி, பா்கத்துல்லா, ஊராட்சிமன்றத் தலைவா் மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
திருப்பூா், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.2.31 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள் துவக்கம்
திருப்பூா், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் ரூ.2.31 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நேற்று (சனிக்கிழமை) தொடங்கிவைத்தாா்.
திருப்பூா், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.2.31 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா, ரூ.63.16 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளுக்கான திறப்பு விழா ஆகியவை நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிக்கு, திருப்பூா் கோட்டாட்சியா் (பொ) ராம்குமாா் தலைமை வகித்தாா். அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று புதிய திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்ததுடன், முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்துவைத்தாா்.
திருப்பூா் ஊராட்சி ஒன்றியம் கணக்கம்பாளையத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.87.74 லட்சம் மதிப்பீட்டில் கே.ஆண்டிபாளையம் முதல் பெருமாநல்லூா் வரை சாலை பலப்படுத்தும் பணி, வாஷிங்டன் நகா் ரேஷன் கடை முதல் விநாயகா் கோயில் வழியாக செந்தூா் காா்டன் வரையில் ரூ.46.11 லட்சம் மதிப்பீட்டில் பேவா் பிளாக் சாலை அமைத்தல், அய்யம்பாளையம் ஆதிகாலனி வடக்குப் பகுதியில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைத்தல், டெக்மா நகரில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைத்தல், செங்கப்பள்ளி ஊராட்சிக்குள்பட்ட பழனிக்கவுண்டன்பாளையத்தில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை மற்றும் கான்கிரீட் சாலை அமைத்தல் உள்பட ரூ.2.31 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, சொக்கனூா் ஊராட்சியில் நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்நடை மருந்தக கட்டடம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.9.16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மகளிா் சுய உதவிக்குழு கட்டடம் உள்பட மொத்தம் ரூ.63.16 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளையும் அமைச்சா் திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பிரேமா ஈஸ்வரமூா்த்தி, மண்டல இணை இயக்குநா் (பொ) (கால்நடை பராமரிப்புத் துறை) அரங்கபிரகாசம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu