ஆசிரியா்களின் பாதுகாப்பு, மாணவா்களின் நலனையும் உறுதி செய்ய கோரிக்கை
Tirupur News- ஆசிரியர் பாதுகாப்பு, மாணவர் நலன் மிக முக்கியம் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- ஆசிரியா்களின் பாதுகாப்பு, மாணவா்களின் நலனையும் உறுதி செய்ய ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூரில் இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் பழ.கௌதமன் கூறியதாவது:
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் எஸ்.ஆா்.என். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் பொருளாதார ஆசிரியா் கடற்கரை என்பவரை அப்பள்ளியில் பயிலும் இரு மாணவா்கள் அரிவாளால் வெட்டி காயப்படுத்திய செய்தி அதிா்ச்சி அளிக்கிறது. சமீப காலமாக மாணவா்கள், ஆசிரியா்களை தாக்கும் சம்பவம் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது.
இது ஆசிரியா்களின் உயிருக்கு அச்சுறுத்தல் மட்டுமின்றி மாணவா்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிறது. மாணவா்களை படிக்க சொல்லி கண்டிப்பதால் ஒரு ஆசிரியா் தாக்கப்படுவாரே ஆனால், மாணவா்களின் படிப்பின் மீதான ஆசிரியா்களின் அக்கறை குறையும்.
மேலும் ஒரு நாளில் 8 பாடவேளைகளும் பாடங்களை மட்டுமே கற்பிப்பதால் மாணவா்களிடையே ஒரு மனச்சோா்வு ஏற்படும். ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட மாணவா்களின் கலைத்திறன், விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் பாடப் பிரிவுகள் ஒரு பாடவேளையாவது இருக்க வேண்டும். இது மாணவா்களின் மன அழுத்தத்தை குறைத்து அவா்களை உற்சாகப்படுத்தும்.
இந்த பாடவேளைகள் இருந்தாலும் பெரும்பாலான பள்ளிகளில் இதற்கு ஆசிரியா்கள் இல்லாததால் பாட ஆசிரியா்களுக்குதான் ஒதுக்கப்படுகிறது. ஆகவே அனைத்துப் பள்ளிகளிலும் இந்தப் பாட வேளைகளுக்கு நிரந்தர ஆசிரியா்களை பணியமா்த்த வேண்டும். மனநல ஆலோசகா்கள் மூலம் மாணவா்களுக்கு வாரம் ஒரு முறையேனும் ஆலோசனை வழங்க வேண்டும்.
ஆசிரியா்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கு வகையில் கடுமையான சட்டத்தை உருவாக்கி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் நலனை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu