சோமனூர் கிளஸ்டர் பகுதியில் ஜவுளிச்சந்தை அமைக்க விசைத்தறியாளர்கள் கோரிக்கை
Tirupur News- சோமனூர் பகுதியில் கிளஸ்டர் பகுதியில் ஜவுளிச்சந்தை அமைக்க, விசைத்தறியாளர்கள் கோரிக்கை (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சாதாரண விசைத்தறிகள் உள்ளன. இங்கு மட்டும், தினசரி ஒரு கோடி மீட்டர் துணி உற்பத்தியும், 50 கோடி ரூபாய் அளவுக்கு வரவு, செலவும் நடக்கிறது. இதில் 80 சதவீத துணிகள் மதிப்பு கூட்டப்பட்டு உள்நாட்டிலேயே குறைந்த விலையில் பயன்படுத்தப்படுகிறது.
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர், மத்திய இணையமைச்சர் முருகனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
விசைத்தறிகள் வாயிலாக கிராமப்புறங்களில் உள்ள பல லட்சம் ஏழை, எளிய குடும்பத்தினர் பயன் பெறுகின்றனர். இந்திய அளவில் 40 சதவீத கிரே காடா துணி, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் உற்பத்தியாகிறது. சாதா விசைத்தறியாளர்கள், மூன்றாண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வுக்காகவும், மின் கட்டணம் உயர்வு ஏற்படும் போதெல்லாம் மின்கட்டண குறைப்புக்காகவும் போராடி வருகின்றனர்.
வட மாநிலங்களில் மட்டுமே இங்கு தயாராகும் காடா துணிகள் மதிப்பு கூட்டப்படுகின்றன. சிறு, குறு விசைத்தறியாளர்கள், உற்பத்தி செய்யும் குறைந்தளவு துணிகளை, வட மாநிலங்களில் நேரடியாக கொண்டு சென்று விற்க முடியாது. இடைத்தரகர்கள் வாயிலாக விற்கும் போது, குறைந்த விலைக்கே விற்க வேண்டியுள்ளது.ஏற்றுமதி தரம் வாய்ந்த துணிகளை உற்பத்தி செய்யவும், உற்பத்தியை அதிகரிக்கவும், சாதாரண விசைத்தறிகள் நவீனப்படுத்தப்பட வேண்டும்.
சோமனூர் கிளஸ்டர் பகுதியில் ஜவுளிச்சந்தை அமைக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு அனுமதியும், மானியமும் வழங்க வேண்டும். அதன் வாயிலாக சாதாரண விசைத்தறிகளை நவீனப்படுத்தி கொள்ள முடியும். வருமானம் பெருகும். வாழ்வாதாரம் உயரும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu