திருப்பூரில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு தினமும் ரயில் சேவை; ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தகவல்
Tirupur News- ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி இராதாகிருஷ்ணன் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today - திருப்பூரில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு தினமும் ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள வேலூரில் செயல்பட்டு வரும் கே.எம்.நிட்வோ் பனியன் நிறுவனத்தில் பிகாா், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த தொழிலாளா்களிடையே கலை இலக்கியம், கலாசாரம், பண்பாடு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மைய திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, கே.எம். நிட்வோ் நிா்வாக இயக்குநரும், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவருமான கே.எம்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இயக்குநா் மகேஷ்வரி சுப்பிரமணியன், செயல் இயக்குநா் காா்த்திக்பிரபு, இணை நிா்வாக இயக்குநா் விஷ்ணுபிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஜாா்க்கண்ட் மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘முத்துசாமி-முத்தம்மாள்’ கலாசார மையத்தை திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது,
ஒரு நிறுவனம் தொழில் வளத்துடனும், தொழிலாளா் நலத்துடனும் இருந்தால் அந்நிறுவனம் வளா்வது நிச்சயம். இந்த நிறுவனத்தில் தொழிலாளா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் அவா்களின் திறமைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. தொழிலாளா்களுக்கு சுகாதாரம், தரமான உணவு, மருத்துவம் உள்ளிட்டவை இந்நிறுவனத்தில் வழங்கி வருவது சிறப்புக்குரியது.
பிகாா், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலத் தொழிலாளா்கள் சென்று வர ஏதுவாக கோவையில் இருந்து தன்பாத் வரை செல்லும் ரயில் சேவை வாரம் ஒருமுறை மட்டுமே இருந்து வருகிறது.
தொழிலாளா்களின் நலனுக்காக இந்த சேவையை நீட்டிக்கும் வகையில், திருப்பூரில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலம் வரை தினமும் ரயில் இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். வட மாநிலத் தொழிலாளா்கள் தமிழகத்தில் மிக மகிழ்ச்சியாக பணியாற்றி வருகின்றனா், என்றாா்.
ஜெய் ஸ்ரீ ராம் கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.எம். தங்கராஜ், தொழிலதிபா்கள் ராமமூா்த்தி, பாலசுப்பிரமணி, பாலுசாமி, ஹரிசஷ்டிவேல், மதுமிதா உள்ளிட்டோா் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu