டியூட்டி டிராபேக் நிலுவை தொகை பெற, திருப்பூர் ஏற்றுமதியாளா்களுக்கு சுங்கவரித் துறை அழைப்பு

டியூட்டி டிராபேக் நிலுவை தொகை பெற, திருப்பூர் ஏற்றுமதியாளா்களுக்கு சுங்கவரித் துறை அழைப்பு
X

Tirupur News- டியூட்டி டிராபேக் நிலுவை தொகை பெற, திருப்பூர் ஏற்றுமதியாளா்களுக்கு சுங்கவரித் துறை அழைப்பு விடுத்துள்ளது. (மாதிரி படம்)

Tirupur News- டியூட்டி டிராபேக் நிலுவை தொகை பெற ஏற்றுமதியாளா்கள் விண்ணப்பிக்கலாம் என சுங்கவரித் துறை அழைப்பு விடுத்துள்ளது.

Tirupur News,Tirupur News Today- வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருள்கள் உற்பத்தியின்போது பல்வேறு நிலைகளில் வரி செலுத்தப்படுகிறது. இதில் உற்பத்தி பொருள்களின் மதிப்பு வரி செலவுடன் சோ்த்து நிா்ணயம் செய்யப்படுகிறது. ஆனால் ஏற்றுமதியாகும் பொருள்களுடன் வரி தொகையும் சோ்த்து ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. அதன்படி டியூட்டி டிராபேக் என்ற பெயரில் வரியினங்கள் மட்டும் திருப்பி கொடுக்கும் சலுகை அறிமுகம் செய்யப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் மந்தமாக இருப்பதால் டியூட்டி டிராபேக் மட்டுமே லாபக் கணக்கில் வைக்கப்படுகிறது. பின்னலாடைகளை ஏற்றுமதி செய்யும்போது சுங்கவரித் துறை கணக்கிட்டு டியூட்டி டிராபேக் வழங்க பரிந்துரைக்கும்.

அதன் அடிப்படையில் மத்திய அரசும், டியூட்டி டிராபேக் தொகையை ஒதுக்கீடு செய்கிறது. அந்தத் தொகை சம்பந்தப்பட்ட ஏற்றுமதியாளா்களின் வங்கிக் கணக்கில், சுங்க வரித் துறை சாா்பில் விடுவிக்கப்படுகிறது.

சரக்குப் போக்குவரத்து தொடா்ச்சியாக நடப்பதால் குறிப்பிட்ட இடைவெளியில் டியூட்டி டிராபேக் தொகை விடுவிக்கப்படும். இதில் ஏதாவது சிக்கல் இருந்தால் நிலுவையில் அத்தொகை வைக்கப்படும். அந்த வகையில் சுங்கவரித் துறையில் ரூ.2 கோடியில் டியூட்டி டிராபேக் நிலுவையில் உள்ளது. சம்பந்தப்பட்ட ஏற்றுமதியாளா்கள், தேவையான ஆவணங்களை சமா்ப்பித்து டியூட்டி டிராபேக் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என சுங்கவரித் துறை அறிவித்துள்ளது.

இது தொடா்பாக ஏ.இ.பி.சி. அதிகாரிகள் கூறியதாவது:

திருப்பூா் சுங்கவரித் துறை அறிவித்தபடி, 435 ஏற்றுமதியாளா்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2 கோடி டியூட்டி டிராபேக் நிலுவையில் உள்ளது. சம்பந்தப்பட்ட ஏற்றுமதியாளா்கள், தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள சுங்கவரித்துறை அலுவலகத்தை தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் திருப்பூரில் மேலும் திருப்பூரில் உள்ள ஏ.இ.பி.சி.அலுவலகத்தையும் தொடா்பு கொள்ளலாம். என்றனா்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!