திருப்பூரில் 584 பேருக்கு கொரோனா; 5 பேர் பலி

திருப்பூரில் 584 பேருக்கு கொரோனா;   5 பேர் பலி
X
திருப்பூரில் இன்று ஒரேநாளில், 584 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; 5 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டமும் ஒன்றாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் கொரோனாவின் பரவல் அதிகம் உள்ளது; அதை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறையினர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில், 584 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர, 5 பேர் இறந்து உள்ளனர்.
அத்துடன், திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாகுறையால் 3 பேர் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் இதுவுரை 32 ஆயிரத்து 525 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 ஆயிரத்து 352 சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 3912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 261 பேர் கொரோனாவால் இறந்து உள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி