அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு; வரும் 30ம் தேதி துவக்கம்

அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு; வரும் 30ம் தேதி துவக்கம்
X

Tirupur News. Tirupur News Today-திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கல்லூரியில், வரும் 30ம் தேதி மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு. (கோப்பு படம்) 

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கல்லூரி, தாராபுரம் அரசு கல்லுாரியில் வரும் 30ம் தேதி, மாணவர் சேர்க்கைக்காக கலந்தாய்வு துவங்குகிறது.

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டபடிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான முதல் கலந்தாய்வு வருகிற 30-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

கல்லூரி முதல்வர் பத்மாவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

தாராபுரம் அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024 கல்வி ஆண்டுக்கான இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு 30-ம் தேதி கல்லூரியில் நடைபெற உள்ளது. மொத்தம் 230 இடங்களுக்கு பி. ஏ. தமிழ், பி. ஏ. ஆங்கிலம், பி. காம். வணிகவியல், பி. எஸ்சி. கணிதம், பி. எஸ்சி. வேதியியல் ஆகிய 5 அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

அதன்படி 30-ம் தேதி காலை 9. 30 மணி சிறப்பு கலந்தாய்வு (அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும்) விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களின் வாரிசு தாரர்கள், தேசிய மாணவர் படை, அந்தமான் நிக்கோபர், பாதுகாப்புத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடக்கிறது. அடுத்த மாதம், ஜூன் 1-ம் தேதி பி. காம். வணிகவியல். 2 மற்றும் 3-ம் தேதிகளில் பி. எஸ்சி. கணிதம் மற்றும் வேதியியல் பி. ஏ. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

விண்ணப்பித்துள்ள மாணவ- மாணவிகளுக்கு நேரடி கலந்தாய்வுக் குறித்த விவரங்கள் அவர்களது அலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. கலந்தாய்வின்போது 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல், இணையவழியில் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகல்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 10, வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், சிறப்பு பிரிவினராக இருப்பின் அதற்குரிய சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள் அனைத்தையும் தவறாமல் கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கல்லூரி

திருப்பூா் பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரியில், 2023-24 ம் ஆண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 30-ம் தேதி தொடங்குகிறது. இந்த கலந்தாய்வின் முதல் நாளில் சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு (அனைத்து இளநிலை பாடப் பிரிவுகள்) மாற்றுத் திறனாளிகள், மாவட்ட அளவில் விளையாட்டு வீராங்கனைகள், ராணுவ வீரா்களின் வாரிசுகள் பங்கேற்கலாம்.

இதைத்தொடா்ந்து, ஜூன் 1 மற்றும் 2 ம் தேதிகளில் கணிதம், இயற்பியல், இயற்பியல் சிஏ., வேதியியல், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், கணினி அறிவியல், மின்னணுவியல் பாடப் பிரிவுகளுக்கும், ஜூன் 3 ம் தேதி வணிகவியல், வணிகவியல் மற்றும் .தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம் ஆகிய பாடப் பிரிவுகளில் சேர ஜூன் 6 -ம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மூச்சுத் திணறல் அப்படினா என்ன.....? இதனால்  அபாயமா....பயப்பட வேண்டாம்  அதற்கான வழிகளை அறியலாம்..!