திருப்பூரில் 712 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பூரில் 712 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
திருப்பூரில் இன்று 712 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா 2 வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த 10 ம் தேதியில் இருந்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், பொது மக்கள் வெளியில் வருவது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி ரோட்டில் மக்கள் நடமாடிக்கொண்டு இருக்கின்றனர்.

இதன் காரணமாக கொரோனா மிக வேகமாக பரவ துவங்கி உள்ளதாக சுகாதார துறையினர் கருதுகின்றனர். இன்று மாநில சுகாதாரத்துறை அறிவித்த பட்டியலில் மாவட்டம் முழுவதும்712 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் இறந்துள்ளார். மாவட்டம் முழுவதும் 33 ஆயிரத்து886 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .28 ஆயிரத்து 867 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டம் முழுவதும் 266 பேர் பலியாகி உள்ளனர்.


Tags

Next Story