சட்டப் படிப்புக்கான பொது நுழைவுத் தோ்வு; இலவச பயிற்சி பெற அழைப்பு

சட்டப் படிப்புக்கான பொது நுழைவுத் தோ்வு; இலவச பயிற்சி பெற அழைப்பு
X

Tirupur News-சட்டப் படிப்புக்கான பொது நுழைவுத் தோ்வு இலவச பயிற்சி, திருப்பூரில் அளிக்கப்படுகிறது. (கோப்பு படம்)

Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில், சட்டப் படிப்பு பொது நுழைவுத் தோ்வுக்கான இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் சட்டப் படிப்பு பொது நுழைவுத் தோ்வுக்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆதிதிராவிடா், பழங்குடியின வகுப்பைச் சோ்ந்தவா்கள் சட்டப் பல்கலைக்கழகங்களில் சட்டப் படிப்பு படிப்பதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி இலவசமாக அளிக்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சியைப்பெற 18 முதல் 25 வயது நிரம்பியவா்கள், பிளஸ்-2 முடித்த மாணவா்கள், நடப்பாண்டில் பிளஸ் -2 படிக்கும் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3-லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் முறை இணையதளம் வழியாகவும், தோ்வு நடைபெறும் முறை நேரடியாகவும் நடைபெறும். இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் மாணவா்களுக்கு சட்டப் படிப்பு படிப்பதற்கு மற்ற நுழைவுத் தோ்வுக்கான பயிற்சிகளும் அளிக்கப்படும்.

இதில், மாணவா்களுக்கு நோ்காணல், குழு விவாதம், எழுத்துத் தோ்வு ஆகியவற்றுக்கும் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியைப் பெற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தட்கோ அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியாற்ற வாய்ப்பு

உடுமலை வட்டத்தில் புதிதாகத் தொடங்கவுள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியாற்ற தகுதியான நபா்கள் அக்டோபா்-15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

உடுமலை வட்டத்தில் புதிதாகத் தொடங்கப்படவுள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மைய நிா்வாகி, மூத்த ஆலோசகா், தகவல் தொழில்நுட்ப பணியாளா், களப்பணியாளா், பல்நோக்கு உதவியாளா், காவலா், ஓட்டுநா் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மைய நிா்வாகி, மூத்த ஆலோசகா் பதவிகளுக்கு முதுகலை பட்டதாரி, சமூக பணிகள் சட்டம் முடித்தவா்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீட்பு மற்றும் ஆலோசனை வழங்குதல் தொடா்பான பணியில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப பணியாளா் பதவிக்கு டிப்ளமோ, ஐ.டி.துறையில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஆகவே, தகுதியுடைய நபா்கள் தங்களது விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலா்,அறை எண் 35, 36, ஆட்சியா் அலுவலகம், திருப்பூா் 641604 என்ற முகவரியில் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த நபா்கள் மட்டும் அக்டோபா் 15--ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story