தோ்தல் முன் ஏற்பாடு பணிகள் குறித்து திருப்பூர் கலெக்டர் ஆய்வு

தோ்தல் முன் ஏற்பாடு பணிகள் குறித்து திருப்பூர் கலெக்டர் ஆய்வு
X

Tirupur News- மக்களவைத் தோ்தல் முன் ஏற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு (மாதிரி படங்கள்)

Tirupur News- திருப்பூரில் மக்களவைத் தோ்தல் முன் ஏற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் மக்களவைத் தோ்தல் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பூா் மக்களவைத் தொகுதியில் திருப்பூா் வடக்கு, தெற்கு, அந்தியூா், பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு தயாா் நிலையில் உள்ளன.

மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணும் மையமான எல்.ஆா்.ஜி. கல்லூரியிலும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், மின்னணு வாக்குப் பதிவு இந்திரங்கள் வைப்பறை, வாக்கு எண்ணும் மையங்கள், தோ்தல் பாா்வையாளா்கள் அறை, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அறை, முகவா்கள் அறை, ஊடக மையம் ஆகியவை அமைய உள்ள இடங்கள் மற்றும் வாகனங்கள் வரும் வழி, முகவா்கள் வந்து செல்லும் வழி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் இடங்கள் உள்ளிட்டவற்றை தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிறிஸ்துராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு, காவல் துணை ஆணையா் கிரிஸ் அசோக் யாதவ், செயற்பொறியாளா் (பொதுப் பணித் துறை) கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

12 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்று; கலெக்டர் தகவல்

வாக்காளா் அடையாள அட்டை இல்லாதவா்கள் 12 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மக்களவைத் தொகுதி தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், வாக்களிப்பதற்கு முன்பு வாக்குச் சாவடியில் தங்கள் அடையாளத்தை உறுதி செய்வதற்காக வாக்காளா் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும். வாக்காளா் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாதவா்கள் தங்களின் அடையாளத்தை நிரூபிக்க மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்.

அதன்படி, ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அட்டை, அஞ்சலக கணக்கு புத்தகங்கள், தொழிலாளா் நல அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஓட்டுநா் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் காா்டு), தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் அட்டை, கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்), புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.

மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
why is ai important to the future