இ-நாம் திட்டத்தில், விளைபொருட்களை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு, கலெக்டர் அழைப்பு
Tirupur News,Tirupur News Today-இ-நாம் திட்டத்தில், விளைபொருட்களை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் (மாதிரி படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், விளைபொருட்களை இ-நாம் திட்டத்தில் விற்பனை செய்து பயன்பெறலாம் என, விவசாயிகளுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
விவசாயிகள் பயன்பெறும் வகையில், மத்திய அரசால் இ-நாம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், நாடு முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை, இணையம் மூலம் ஒருங்கிணைத்து, எங்கிருந்தும் விளைபொருள்களை விற்பனை, கொள்முதல் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், நாடு முழுவதும் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
திருப்பூா், உடுமலை, பெதப்பம்பட்டி, வெள்ளக்கோவில, மூலனூா், மடத்துக்குளம், காங்கயம், பொங்கலூா், சேவூா் ஆகிய 9 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ஏல நடைமுறைகள் அனைத்தும் மின்னணு முறையில் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. துல்லியமான தர அளவுகள் உறுதி செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கிறது. இதனால், விவசாயிகளுக்கு உழைப்புக்கு ஏற்ப, நல்ல வருமானமும் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
மேலும், இ-நாம் திட்டத்தில் பண்ணை வாயில் வணிகம் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், விளைப்பொருள்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு எடுத்து வருவதற்கான ஏற்றுக்கூலி, போக்குவரத்து செலவுகளை குறைக்கும் வகையில் விவசாயிகளின் இருப்பிடத்துக்கே ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலா்கள் சென்று இ-நாம் செயலி மூலம் விளைபொருள்களை விற்பனை செய்து தருகின்றனா். இதற்கான பணமும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, திருப்பூா் மாவட்ட விவசாயிகள் அனைவரும் அந்தந்தப் பகுதியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகி இ-நாம் மற்றும் பண்ணை வாயில் வணிகம் மூலம் விளைபொருள்களை விற்பனை செய்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu